இலங்கையில் இந்த மாதக்காலப்பகுதியில் அதிதீவிரமாக இன்புளுவென்சா என்னும் தொற்று நோய் பரவிவருவதாக சுகாதர அமைச்சு எச்சரித்து வருகிறது.
இந்த நோய் வைரஸ் வகை சார்ந்தது ஆகும். மக்களை தாக்கும் இன்புளுவன்சா நோய் காரணி வகை எ , வகை பி , வகை சி என்பன ஆகும்.
உங்களுக்கு இன்புளுவென்ஸா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதனை அதிக காச்சல் , தொண்டைவலி , மூக்கு ஓடுதல் , உடல் வலி , இருமல் போன்றவை மூலம் அறியலாம்.
இத்தகைய அறிகுறி கண்டால் வைத்தியரை நாடுவது நல்லது.
இன்புளுவென்ஸா தொற்று காற்று வழியாக இருமல் மூலமும் பரவ வாய்ப்புள்ளது.
இந்த நோயின் தாக்கம் இலங்கையில் வருட ஆரம்பத்திலேயே வெளித்தொடங்க ஆரம்பித்து விட்டது. கண்டியில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் இருந்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மரணித்தது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏப்ரல் மாத அளவிலேயே மிக வேகமாக பரவ ஆரம்பித்தது ஜூனில் உச்சம் அடைந்தது.
கலவானை பகுதியில் முதலில் ஏப்ரல் மாதம் 11 பேர் இன்புளுவென்சாவால் பாதிக்கப்பட்டனர் . மே மாதமளவில் 6 பேர் பாதிக்கப்பட்டனர் .ஜூன் மாதத்தில் 103 பேர் பாதிக்கப்பட்டனர்.அதில் அதிகமாக பெண்களே காணப்பட்டனர்.
75 பெண்கள் 33ஆண்களும் சிறுவராகவும் அடங்குகின்றனர் இதில் 14 பேர் மரணித்தனர்.
இன்புளுவென்ஸா சாதாரண ஒருவருக்கு ஏற்பட்டால் 3, 4 நாட்களில் சரியாக வாய்ப்புண்டு அதே கர்ப்பிணி தாய் , வயோதிபர் , 2 வயதுக்கு குறைந்த குழந்தை , தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கெல்லாம் மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு இந்த நோய்க்கான மருத்துவ வசதிகள் அனைத்தும் தேவையானளவு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கொரோனாவுக்கு எடுத்த முன் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.