நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக குளிரான வானிலை நிலைமை நாடு முழுவதும் காணப்படுகின்றது.
இதனால் 16000 மேற்பட்டவர் பாதிக்க பட்டுள்ளதுடன் 4000 க்கு மேற்பட்டவர் வீடுகளை பகுதி அளவில் இழந்துள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேருக்கு பேற்பட்டவர் முழுமையாக வீடுகள் இன்றி உள்ளனர்.
வடகிழக்கு , வட மேற்கு , தென் மாகாணங்களில் குளிருடனான காலநிலையும் ஏனைய பகுதிகளில் மழைபெய்ய கூடும் என்றும் காலை வேளையில் நீர்கொழும்பு , கொழும்பு பகுதியில் கனத்த மழை பெய்ததுடன் நீர்கொழும்பு பகுதில் நேற்று வீசிய கடும் காற்றில் 14 வீட்டுக்கைளின் கூரைகள் பறந்துள்ளதாகவும் தெரிய வருகிறது .
இரத்தின பூரி , கறவைத்த , ஓப்பாவல , பலங்கோட்டை பகுதிகளில் காற்று மாசு அதிகமாக காணப்படுவதாகவும் மக்கள் வெளியில் செல்வது அச்சுருத்தல் நிலவி உள்ளத்துடன்.
குளிருடனான காலநிலையினால் வடகிழக்கு பகுதிகளில் இறந்த கால்நடைகள் மாதிரி பேராதனை ஆய்வுக்காக ஆய்வு கூடத்துக்கு வழங்க பட உள்ளது.கடந்த 8 ஆம் , 9ஆம் திகதிகளில் கால்நடைகளின் மரணம் பதிவாகியுள்ளதுடன் திறந்த வெளியில் இருந்த விலங்குகள் மனஉளைச்சலுக்கு ஆளாகி மரணித்திருக்கலாம் என்று சுகாதார வைத்திய அதிகாரி ஹேமாலி கொத்தலாவ கருத்து தெரிவித்ததுள்ளார்.
இந்த காலநிலை மாற்றம் தொடர்பில் ருவான் ஜெயவர்த்தன அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பொருளாதாரத்தில் இது பெரிதும் தாக்கம் செலுத்த உள்ளமையினால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கால்நடை உயிரிழப்பால் மாட்டிறைச்சி ,ஆட்டிறைச்சிகள் விற்பனைக்கு கொண்டுசெல்லல் தடை விதிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.