மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளைய தினம் இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இவ்வாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் விளக்குகளை அணைக்கவும்
இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க கருத்து தெரிவிக்கையில்,
நாளை மாலை 7 மணிக்கு, டிப் சுவிட்ச் மூலம் உங்கள் வீட்டின் மின் அமைப்பை அணைக்கவும். மின் விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். உங்கள் வீட்டு மின் விளக்குகளை அணைக்கவும். இதன் விளைவை அடையாளப்பூர்வமாக பிரபலப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சீரமைக்கக் கோரி நேற்று பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.