கண்டேன் காட்சியொன்று
கடற்கரை மணல்பரப்பில்,
கண்கவர் கோலம் -அந்த
மதில்சுவர் மறைப்பில்.
விரிப்புக்கள் இல்லா
விசித்திர உலகம்
மறைப்புக்கள் இன்றியே
இதழ் நின்று உரசும்.
கேட்க யாருமில்லை
பதிலும் அவசியமில்லை
கேட்டால்தானே சொல்ல
பார்க்க மட்டும் ஆயிரம் பேர்.
காற்று வாங்க சிலர்,
கடலை ரசிக்க சிலர்,
காதல் கொள்ள சிலர்;அங்கே
காமங்கொள்ள பலர்.
கொட்டிக் கிடக்கின்றது அங்கே
குப்பைகள் மட்டுமல்ல கொடுமைகளுமே!
குவிந்துகிடக்கிறது அங்கே
காதல் சுவடுகள் மட்டுமல்ல
காமத்தின் எச்சங்களுமே!
வெள்ளை வத்தை”வீச்”
விலைபோய் விட்டது.
எல்லையில்லாக் கடலோ
துணைபோய் விட்டது..
பாவம் அவர்களும் வித்தை
கற்றுக் காட்டுகிறார்கள் விந்தை,
சொல்வான் எதிர்காலம் பற்றி-நாமோ
கை நீட்டி நிக்கும் மந்தை.
ஆம் மாந்தைதான் நாம்
ஆந்தைகள் போல,
இன்னும் சொனால் நாம்
தலையில்லா முண்டங்களே.
-வை.கே.ராஜூ-
நன்றி : tamilcnn.lk/archives