பதுளை- பசறை வீதியூடாக பயணித்த பேருந்தொன்று இன்று (சனிக்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணம் மேற்கொண்ட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை- லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து, பசறை 13ஆம் கட்டையில் வைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.