பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
முழு நாட்டை உள்ளடக்கும் வகையில் மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இது தொடர்பான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிரதானமாக மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் நேற்று வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை தீர்மானித்திருந்தது.