பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்துவந்த, இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா கடந்த வாரம் போலீசில் புகார் அளித்தார். மனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார். புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.
இதனிடையே உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் பிரியங்கா இறந்ததாகவும், இதனால் உன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரியங்காவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நடிகர் உன்னி தேவ்வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.