தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 tbsp
பாகற்காய் – 300 கிராம்
கடுகு – 1/2 tsp
வெந்தையம் – 1/2 tsp
உளுத்தம் பருப்பு – 1/2 tsp
சீரகம் – 1/2 tsp
மிளகு – 1/4 tsp
பூண்டு – 4
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 2
தனியா பொடி – 1 tsp
மிளகாய் தூள் – 1 tsp
மஞ்சள் பொடி – 1/4 tsp
குழம்பு மிளகாய் தூள் – 2 tbsp
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தே.அ
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதே எண்ணெயில் கடுகு , வெந்தையம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி -தினகரன்