சீனாவின் பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
132 பேருடன் பயணித்த China Eastern Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குன்மிங் (Kunming) பகுதியிலிருந்து குவாங்ஸு (Guangzhou) நோக்கி பயணித்த விமானம் குவாங்ஸி (Guangxi) மாகாணத்திலுள்ள மலையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகின்ற அதேநேரம், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.
மிகவும் பாதுகாப்பான சேவைகளை வழங்குபவை எனும் நற்சான்று, சீன விமான சேவைகளுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பாரிய விமான விபத்தொன்று இறுதியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.