இந்த தியானத்தை காலை மாலை இரு வேளையும் பயிற்சி செய்யவும். மன அமைதி கிடைக்கும். மூளை செல்கள் நன்கு புத்துணர்வு பெற்று இயங்கும். மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும் வலது காலை மடித்து இடது கால் தொடையில் வைக்கவும். இடது காலை மடித்து வலது கால் அடியில் படத்தில் உள்ளது போல் வைக்கவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராண காற்று நமக்குள் இறங்குவதாக எண்ணவும். மூச்சு வெளியே விடும்பொழுது உடல், மனதில் உள்ள டென்ஷன், அழுத்தம், உடலை விட்டு நீங்குவதாக எண்ணவும்.
பின் மூளை உள் பகுதி அதைச் சுற்றி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நல்ல பிராண ஆற்றல் கிடைப்பதாக எண்ணவும். மூளை நரம்பு மண்டலங்களில் உள்ள சூடு, அதிக சூடு குறைந்து சாதாரண நிலையில் இருப்பதாக எண்ணவும். உங்களது மூச்சோட்டதை மூளை பகுதி முழுக்க நிலை நிறுத்தி தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தவும்.
பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் நிலை நிறுத்தி உங்களது மூச்சோட்டத்தை சாந்தமான மன நிலையில் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
இந்த தியானத்தை காலை மாலை இரு வேளையும் பயிற்சி செய்யவும். மன அமைதி கிடைக்கும். மூளை செல்கள் நன்கு புத்துணர்வு பெற்று இயங்கும். மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
நமது உடலில் முழுமையான இயக்கம், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூளைதான். மூளைக்கு செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டசத்துக்கள் குறையும் பொழுது அதன் விழிப்புத்தன்மை குறைந்து மந்தமாகிவிடும். அதிக காபி டீ குடிப்பதால் மூளையின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.
மூளை நன்கு இயங்க ஆரோக்கியமாக இருக்க மூளைக்கு தேவையான குளுகோஸ் புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் தேவை.
நன்றி | மாலை மலர்