செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கூரன்’ பட முதல் தோற்ற பார்வை

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கூரன்’ பட முதல் தோற்ற பார்வை

1 minutes read

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகரன்  மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கூரன்’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் நிதின் வேம்படி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூரன்’ எனும் திரைப்படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரன் , பாலாஜி சக்திவேல்,  வை. ஜி. மகேந்திரன், சத்யன், இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்கி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வையில் நீதிமன்றம் ஒன்றின் கூண்டில் செல்லப்பிராணியான நாய் ஒன்று நிற்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும்.. தனக்கு நியாயம் தேடி செல்லப்பிராணியான நாய் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருப்பது போல் உள்ளதாலும்.. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.