செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

2 minutes read

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று  நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அறிவித்துள்ளது.

அந்த வகையில், இதற்கு முன்னர் ரூ. 2,675 ஆக இருந்த 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 5kg, 2.3kg சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

  • 12.5kg: ரூ. 2,675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,071 இலிருந்து ரூ. 1,945 ஆக ரூ. 874 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 910 இலிருந்து ரூ. 910 ஆக ரூ. 404 இனால் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு,

  • 12.5kg: ரூ. 1,257 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 2,750
  • 5kg: ரூ. 503 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 1,101
  • 2.3kg: ரூ. 231 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 520

அதிகரிப்பதாக அறிவித்திருந்த விலைகளில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய

  • 12.5kg – ரூ. 2,675 (ரூ. 75 குறைப்பு)
  • 5kg – ரூ. 1,071 (ரூ. 30 குறைப்பு)
  • 2.3kg – ரூ. 506 (ரூ. 14 குறைப்பு)

என விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி Laugfs எரிவாயு நிறுவனம் மேற்கொண்ட விலை அதிகரிப்பு வருமாறு:

  • 12.5kg: ரூ. 2,840 இலிருந்து ரூ.  4,199 ஆக ரூ. 1,359 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,136 இலிருந்து ரூ. 1,136 ஆக ரூ. 1,680 இனால் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதியும், Laugfs கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More