இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு கப்,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
கருப்பு எள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) – ஒரு டீஸ்பூன்,
புளித் தண்ணீர் – கால் கப்,
கொப்பரைத் துருவல் – அரை கப்,
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்,
கசகசா – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை, உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
செய்முறை:
கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும்.
அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.
நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும்.
இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.
இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.
நன்றி | மாலை மலர்