0
தேவையான பொருட்கள்
கேரட் – கால் கிலோ
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
ஓமம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
- அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.
நன்றி | மாலை மலர்