தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 5
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – அரை முடி
தாளிக்க:
கிராம்பு
பட்டை
பிரிஞ்சி இலை, ஏலக்காய்
செய்முறை :
முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு குழைய வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
குக்கரில் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
வெந்ததும மூடியை திறந்து சூடாக எடுத்து பரிமாறவும்.
சூப்பரான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ் ரெடி.
நன்றி | மாலை மலர்