செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம்

இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம்

1 minutes read

இரசாயனங்கள் என்றும் உங்களுக்கு நிரந்திரமான தீர்வை தரவல்லது அல்ல. தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற லாப நோக்குடன் தான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் இதில் சிலவன பக்கவிளைவுகள் தரக்கூடியதும் கூட. எனவே, இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும்.

கேரட் மற்றும் பால்
கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

கேரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்

எலுமிச்சை சாறு
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.

பால் மற்றும் கடற்சங்கு
கடற்சங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது பூசி வந்தால் இரண்டே நாட்களில் பருக்கள் குறையும்.

புதினா மற்றும் தேன்
புதினா இலைகளை அரைத்துச் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பப்பாளிப் பழம்
பப்பாளிப் பழத்தை நன்கு பிசைந்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறு ஆவி
எலுமிச்சை சாறு பிழிந்த நீரில் ஆவி பிடித்தல், முகத்தில் இருக்கும் மாசினை அகற்றி பளபளப்பாக்க உதவும்.

ஆதாரம்: www.tamil.boldsky.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More