கனடாவின் கிழக்கு பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த ஃபியோனா புயலால், லட்சக் கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஃபியோனா புயலால் நோவா ஸ்கோடியா உள்ளிட்ட தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகளால், கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
பல வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், நியூஃபவுண்ட்லாந்தில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.