யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்து இம்மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்தை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விமான சேவை தொடர்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.