மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் வெளியில் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வெளியே சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது.
இறைச்சி, முட்டை மற்றும் மீனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஏனெனில் பொதுவாக இந்த ஷரவான் மாதத்தில் மக்கள் இறைச்சி உணவுகளை சாப்பிடுவதில்லை. மேலும் மழைக்காலத்தில் இறைச்சி உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
இறைச்சியுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடுவதை விட மற்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைக்கீரை விதைகள், வாழைப்பழ மாவு போன்றவற்றை இந்த மழைக்காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சில வகை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கு இலை வடை, புளிச்ச கீரை போன்றவற்றை அதிகமாக எடுத்துரைக்க பரிந்துரைக்கிறார்.
இமாச்சலப் பிரதேச மக்களின் வேகவைத்த உணவுகளான சித்து, மோதகம் மற்றும் பாஃப்லா போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது மழைக்காலத்தில் உங்க உடம்பு சூட்டை அதிகரிக்க உதவி செய்யும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். எனவே பருவ மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை சேர்ப்பது நோய்களை விரட்டியடிக்க முடியும்.