கடந்த 29ஆம் திகதி தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.
120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ, benchpress பிரிவில் 183 கிலோ, deadlift பிரிவில் 275 கிலோ பளுக்களை தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் சற்குணராசா புசாந்தன் எதிர்வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச பளுதூக்கல் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.