t20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 குழு 1க்காக நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதில் அடிலெயிட்டில் நேற்று இரண்டாவது போட்டியாக நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடிய நிலையில் 4 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது இலங்கையின் கைகளிலேயே உள்ளது. இலங்கை அணி இங்கிலாந்து அணியை இன்றைய போட்டியில் வீழ்த்தினால் அவுஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
மறுபுறம் அவுஸ்திரேலியாவை விடவும் அதிக நிகர ஓட்டங்களுடன் இருக்கும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி முன்னேறியது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சுப்பர் 12 சுற்றின் குழு 1க்கான கடைசிப் போட்டி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் நடைபெற்றது.இதில் இங்கிலாந்து 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதேவேளை t20 உலகக் கிண்ணப் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.