தென்னாபிரிக்காவில் பிறந்த கனடிய ,அமெரிக்க தொழிலதிபர் எலன் மாஸ்க் .இவர் பல கஷ்டங்களை அனுபவித்து தனது வாழ்க்கையில் முன்னேறி இன்று உலகின் முதலாவது பணக்காரராக உள்ளார்.
எலன் ட்விட்டரை குறிப்பிட்ட காலத்துக்குள் வாங்கி பலரின் நற்பெயரையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் நிலையில் அவரின் சாதனைகளை கெளரவிக்கும் விதமாக, 30 அடி நீளமுள்ள நினைவுச்சின்னத்தை, கனடாவில் உள்ள அவரது ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுமார் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில், 5 அடி 9 அங்குல உயரத்தில் அலுமினியத்தால் செய்யப்பட்ட அந்த நினைவுச்சின்னத்தை, கனடாவை சேர்ந்த உலோக சிற்பிகளான Kevin மற்றும் Michelle ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.