G20 மாநாடு இன்று இந்தோனேசியாவில் பாலி தீவில் ஜலான் னுசாதுவாவில் சிறப்பான ஏற்பாடுகளுடன் ஆரம்பமானது.
இந்த g20 வழமையாக 19 நாடுகளும் அதனுட ஐரோப்பிய ஒன்றியமும் இணைவது உண்டு இந்த மாநாடு குறைந்தது ஒரு ஆண்டில் ஒரு முறையாவது நடைபெறுவது வழக்கம்.
இந்த மாநாட்டுக்காக முக்கிய தலைவர்கள் மாநாடு நடை பெரும் இடத்தை சென்று அடைந்தனர் இந்திய தலைவர் மோடி அவர்கள் தனி விமானம் மூலம் பாலி நகரை சென்றடைந்தார் மேலும் இந்த மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ,சீனா அதிபர் ஜி ஜின்பிங் ,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் , இங்கிலாந்து பிரதமர் ரிசி சுணக்க ,கனடா பிரதமர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த அனைவரையும் இந்தோனேசிய அதிபர் ஜோகோவிட்டோட சிறப்பாக வரவேற்றார்.
மேலும் இரவு விருந்தில் அனைவரும் சந்தித்ததுடன் சீனா ஜனாதிபதியும் இந்திய ஜனாதிபதியும் நேருக்கு நேர் சந்தித்தமை குறிப்பிட்ட வேண்டிய விடயம்
மேலும் ஜே பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாற்றி உள்ளனர் என்பதும் ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகின்றது.
G20 மாநாட்டில் காலநிலை ,கொரோனா,உக்ரைன் போர் பற்றிய விடயங்கள் பேசபட்டு வருவதுடன் இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்க பட்டுள்ளது.
இங்கு கலந்து கொள்ள வந்த கம்பூட்டிய பிரதமர் ஹான்சென் கொரோனா தொற்று காரணமாக நேற்று மாலை நாடு திரும்பினார் என்பதும் குறிப்பிட்ட தக்க விடயம்
அடுத்த வருடம் G20 மாநாடு ஒரே பூமி , ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தொனி பொருளில் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்த மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது.