நடிகராக பல சாதனைகளையும் உயரத்தை தொட்டவரும் உலக நாயகன் என்ற பட்டத்துக்கு சொந்தகார் கமல ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018 ஆம் ஆண்டு நிறுவினார்.
பொது தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் என்று இது வரை தோல்விகளை மட்டும் கண்டுள்ளார். இந்த முறை தேர்தலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவேன் என்று திட சங்கட்பம் எடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிர்வாக குழு சந்திப்பில் பூத் கமிட்டியை விரைவு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் புது வியூகங்களை தொடங்கி செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனை தான் மாத்திரம் செயல் முறை படுத்தினால் போதாது என்றும் கட்சி நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.மேலும் மக்கள் பணியே எனது பணியும் கூட என்றும் கூறினார் .