“பண்பலை” எனும் தமிழ் சொல்லை வெறுமனே frequency modulation எனும் ஆங்கில சொல்லின் தமிழ் பொருளாய் நான் உணர்வதில்லை இதற்குள் பண்பட்ட, பண்பாடு எனும் சொற்களின் பொருள் பொதிந்த அதி உயர் விழுமியங்களும் காணப்படுகின்றன. இருபத்துநான்கு அகவைகள் இவை அத்தனையையும் தாங்கிப் பிடித்தோர் பிடித்துக்கொண்டு இருப்போர் பலர். அவர்கள் அத்தனை பேரினது உழைப்பும் மறைந்த எமது நிறுவன மாபெரும் தலைவர் ராஜமகேந்திரன் அவர்களின் எண்ணமுமே இப் பொருள்கோடலை சாத்தியமாக்கியது.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் “
என்ற குறளின் பொருளுக்கிணங்க சக்தி பண்பலையின் இலட்சிணை, நேயோர் மனம் நிற்க துணைகொண்ட அத்தனை பெருந்தகைகளையும் இந்தநன்னாளில் வாழ்த்தி நன்றி கூறுகிறோம்.
தமிழ் பேசும் மக்களின் “சக்தி” பண்பலைக்கு இன்றுடன் அகவை 24
-தன்மை இழவேல்- பாரதி விதைத்த புதிய ஆத்திசூடியின் இந்தக் கருத்தினை இயங்கும் படையணி நிச்சயமாய் ஏந்தி நிற்கும்.
ஐயாத்துரை கஜமுகன்