செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை விஞ்ஞானி கலிலியோ கலிலி உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்! விஞ்ஞானி கலிலியோ கலிலி உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்!

விஞ்ஞானி கலிலியோ கலிலி உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்! விஞ்ஞானி கலிலியோ கலிலி உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்!

2 minutes read

கலிலியோ கலிலி இத்தாலிய விஞ்ஞானி. நமது சூரிய குடும்பத்தின் அமைப்பு, வானசாஸ்திரம் ஆகியவை குறித்து புதிய விஷயங்களை கண்டுபிடித்து அறிவித்தவர். அவருடைய கண்டுபிடிப்புகள்தான் புதிய சிந்தனையை உருவாக்கின. அவரைப் பற்றிய மிகவும் முக்கியமான சில

உண்மைத் தகவல்களைப் பார்க்கலாம்…. * இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கலிலியோ பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார்.

முற்காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிவைத்தபடி ஆண்களுக்கு 32 பற்கள் உண்டு என்றும், பெண்களுக்கு 28 பற்கள் தான் உண்டு என்றும் நம்பிவந்தனர். அதையே, கலிலியோவின் பள்ளியிலும் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். கலிலியோ அதை பரிசோதனை செய்துபார்த்தார். வீட்டில் அவரது அம்மா மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பற்களையும், ஆண்களின் பற்களையும் எண்ணிப்பார்த்து அரிஸ்டாட்டில் கூறியது தவறு. ஆண், பெண் அனைவருக்கும் 32 பற்கள் உண்டு என்ற உண்மையைக் கூறினார்.

* வானவியல் அறிஞர், வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை.

அவர்களது கண்டுபிடிப்புகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப்படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண்டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

* பிசாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அதனை முடிக்காமல், கணிதத்தை தேர்வு செய்து படித்தார். *இந்த தொலைநோக்கி மூலம், அதற்கு முன் வானியலாளர்கள் வானில் கண்டதைவிட நீண்ட தொலைவுக்கு அப்பாலும் கலிலியோவால் காண முடிந்தது. 1610 ஆம் ஆண்டு, வியாழன் கிரகத்தைச் 4 பொருட்கள் சுற்றுவதைக் கண்டுபிடித்தார். இவை, வியாழனின் மிகப்பெரிய நிலவுகளாகும். லோ, கலிஸ்டோ, ஈரோப்பா, கனிமீடு என்று இவை அழைக்கப்படுகின்றன.

* பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, கோபர் நிகோலஸ், ஜோகன்னஸ் கெப்லர் ஆகியோரின் ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் வைத்தது என்று கூறுகிறார்கள்.

அவரை கல்லால் அடித்து தீயில் போட்டதாக முன்பு கூறப்பட்டது.

* பூமியில் கடல் அலைகள் உருவாவதற்கு நிலவுதான் காரணம் என்ற கெப்லரின் கோட்பாட்டை ஏற்க கலிலியோ மறுத்தார். மாறாக, பூமியின் சுழற்சியால் இயற்கையாகவே அலைகள் உருவாவதாக நம்பினார். (இது தலைசிறந்த மனிதர்களும் தவறு செய்வார்கள் என்பதை உறுதிசெய்ய உதவியது).

* கலிலியோவின் பிரபலமான கருத்துக்கள் * அறிவியல் கேள்விகளுக்கு ஆயிரம் பேர் சேர்ந்து அளிக்கும் பதில்கள் அதிகாரபூர்வமானவை அல்ல. மாறாக ஆதாரங்களுடன் தகுந்த காரணங்களுடன் ஒருவர் அளிக்கும் பதில் மட்டுமே உண்மையானது.

* உண்மையின் சக்தியை இப்போது உணருங்கள்: ஆய்வின் ஆரம்பகட்டத்தில் ஒரு விஷயம் தோன்றும். மீண்டும் மீண்டும் கவனமாக ஆய்வை மேற்கொள்ளும்போது, அதில் மாறுபட்ட கருத்துகள் உருவாகும்.

 

மாபெரும் விஞ்ஞானி கலிலியோ

1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்….

 

 

நன்றி : இன்று ஒரு தகவல் | கரை செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More