0
ஏ.எச்.எம். பௌஸி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எம்.பி. பதவியைத் துறந்தார்.
அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த பௌஸி எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.