ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கியே குறித்த சிறுவன் சாவடைந்தார்.
சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஆற்றில் சிறுவனின் சடலத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.