பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தையே அரசு துரிதமாகக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதன் ஊடாக பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதன் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது அரசு ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர முனைகின்றது என்றும், அதன் ஊடாக தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசு பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.