வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம். கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்கரிலும் முதலீட்டு வலயங்கள் அமைக்க உத்தேசித்துள்ளோம்” – என்று முதலீட்டுச் சபை பிரதிநிதி குறிப்பிட்டார்.