கம்பளையில் வீட்டை விட்டு வெளியேறி பணியிடத்துக்குச் சென்ற யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யுவதியைத் தேடும் நடவடிக்கையை கிராம மக்களும் கம்பளைப் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியே காணாமல்போயுள்ளார்.
அவர் கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றினார் என்று அவரது சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காகக் குறித்த யுவதி வீட்டை விட்டு வெளியேறினார் என்று பாத்திமாவின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டை விட்டுச் செல்லும் போது பஸ் கட்டணமாக நூறு ரூபா கேட்டார் என்றும், யார் மீதும் தங்களுக்கு எந்தப் பகையும் இல்லை என்றும் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.