1
ஜோ லிண்டர் ஜெர்மனியின் பிரபல பாடி பில்டர் , முப்பதே வயதில் ரத்த நாள வெடிப்பால் அகால மரணமடைந்தார்.
பாடி பில்டிங் வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதன்மூலம் உலகளவில் பிரபலமான ஜோ லிண்டர், கட்டுடல் அடைவதற்காக ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
3 நாட்களுக்கு முன் கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டபோது அதனை பொருட்படுத்தாமல் இருந்த லிண்டர், அன்யூரிசம் என்றழைக்கப்படும் ரத்த நாள வெடிப்பால் உயிரிழந்ததாக அவரது பெண் தோழி தெரிவித்துள்ளார்.