பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான், கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை பயணித்த ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயிலே, ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
இந்த விபத்தில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். தடம்புரண்ட பத்து பெட்டிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.