நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையகக் கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12ஆம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ‘மலையகம் – 200’ தொடர்பில் நடத்தவுள்ள, ‘நாம் இலங்கையர்’ பேரணி காரணமாக, கூட்டணி எம்.பிக்கள் 11ஆம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும், 10ஆம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், உசிதமான தினத்தைக் கலந்தாலோசனையின் பின் தெரிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.