மகாராஷ்டிரா அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர்.
தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
காவலர் பக்க பிரேக் வேனில் ஏற்பட்ட தீ, வேகமாக அருகில் இருந்த நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.