இங்கிலாந்தில் உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் மன உளைச்சல் காரணமாக 40 வயதுகளில் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிக்கையின்படி, 40களின் முற்பகுதியில் இருப்பவர்களை விட, 20 வயதின் முற்பகுதியில் உள்ளவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக வேலையில்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
மனநலப் பிரச்சனைகள் உள்ள இளைஞர்கள் நல்ல கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மங்கி, வேலை இல்லாமல் அல்லது குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்குச் செல்லலாம் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மோசமான மனநலம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2021/22 இல், 18 முதல் 24 வயதுடைய இளைஞர்களில் 34% பேர் மனச்சோர்வு, பதட்டம் அல்லது இருமுனைக் கோளாறு போன்ற மனநலக் கோளாறின் அறிகுறிகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
இது 2000 ஆம் ஆண்டை விட கணிசமான அதிகரிப்பு என்பதுடன், முன்னர் அந்த எண்ணிக்கை 24% ஆக இருந்தது.
புதிய ஆய்வின்படி குறிப்பாக இளம் பெண்கள் பாதிக்கப்படுவதுடன், இளைஞர்களை விட மோசமான மன ஆரோக்கியத்தை அனுபவிக்கும் வாய்ப்பு ஒன்றரை மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.