கடந்த 2017 ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலண்டனில் பேருந்து சேவை தூரத்தின் எண்ணிக்கை 22 மில்லியன் மைல்களினால் குறைக்கப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
போக்குவரத்துத் துறை (பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களில், 2017 இல் 304 மில்லியனாக இருந்த பேருந்து மைல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 282 மில்லியன் மைல்களாக (453.8 மில்லியன் கிமீ) குறைந்துள்ளது.
அத்துடன், 2022 மற்றும் 2023 க்கு இடையில் தலைநகரில் பேருந்து பயணங்களின் தூரம் 10 மில்லியன் மைல்கள் (16 மில்லியன் கிமீ) வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல், 1,403 பேருந்துகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதாவது, 10,191 இலிருந்து 8,788 ஆக எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், இது கிட்டத்தட்ட 14 சதவீத குறைப்பாகும்.