தென்கிழக்கு இலண்டனில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் லூயிஷாம் நகரத்தில் உள்ள கேட்ஃபோர்ட் பிராட்வேக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகவும், அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், குற்றவாளிகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 101-ஐ அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.