கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலின் தென் பகுதியை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில் அங்கு போர் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் ஏறக்குறைய 1,200 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்தது.
இந்த நிலையில், தற்போது ஹமாஸ் வசம் இன்னும் 100 பிணையாளிகள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 34,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 80 சதவீதமானவர்கள் தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், காஸாவின் வடக்கு பகுதியில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.
காஸா வட்டாரத்தில் போர் தொடங்கி இன்றுடன் 200 நாள்களாகும் நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் பிராந்திய அளவிலான பூசலை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரானும் இஸ்ரேலும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.