விக்டோரியா பஸ் நிலையத்துக்கு வெளியே இரட்டை அடுக்கு பஸ் மோதியதில் பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பெண் மீது பஸ் மோதிய பின்னர், பொலிஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் குழுவினரால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மாநகர பொலிஸார் சனிக்கிழமை கூறினர்.
“பஸ் மற்றும் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட வீதி போக்குவரத்து மோதல் பற்றிய புகாரைத் தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனை வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
ஒரு பெண்ணுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் சமாளிக்கும் போது தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டன” என, மாநகர பொலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
56 வயதான கேத்தரின் ஃபின்னேகன், விக்டோரியா பஸ் நிலையத்தில் காலை நேர நெரிசலின் போது ஒரு பஸ் மோதியதில் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விக்டோரியா பஸ் நிலையம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வீதி பகுதியில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.