தென்கிழக்கு இலண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் கென்னிங்டனில் ஹாட்ஸ்பர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து குழந்தை விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 4.23 மணியளவில் அந்த முகவரிக்கு அழைக்கப்பட்ட பொலிஸார், “சம்பவம் சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் இல்லை” என்று கூறினார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.