தென்கிழக்கு இலண்டன் தெருவில் நபர் ஒருவரை கத்தியால் குத்திய 23 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
40 வயதுடைய நபர் ஒருவர் சார்ல்டனில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து, தற்போது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பெருநகர பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 23 வயதான மார்கஸ் மிஸ்கின் மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் கத்தியால் தாக்கப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று பொலிஸார் நம்புகிறார்கள்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் அதிகாரிகள் தேடவில்லை என தெரிவித்துள்ளனர்.
“மே 25, சனிக்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாக, காஷ்மீர் சாலையில், SE7 இல் உள்ள குடியிருப்பு முகவரிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
” இதனையடுத்து 40 வயதுடைய ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“விசாரணை தொடங்கப்பட்டதுடன், 23 வயது நபர் கைது செய்யப்பட்டார். மே 27, திங்கட்கிழமை, மார்கஸ் மிஸ்கின், 23, (8/11/20) கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டார்.
“இதனையடுத்து, மே 28, செவ்வாய்க்கிழமை, ப்ரோம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார். இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை.” என, பெருநகர பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.