ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை சொந்த நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆயிரக்கணக்கான மக்கள் இலண்டன் வழியாக பேரணியாக சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ஹோல்போர்னில் உள்ள லிங்கன் இன் ஃபீல்ட்ஸில் தொடங்கிய பேரணி, மத்திய இலண்டனில் உள்ள வைட்ஹாலில் முடிவடைந்தது.
இந்த பேரணியில் கலந்துகொண்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள், நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் உள்ள அனைத்து தரப்பினரும் “எங்கள் அன்புக்குரியவர்களை வீட்டிற்கு அழைத்து வர” விரைவாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் UK ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டன.
கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்ட பின்னர் மொத்தம் 121 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களில் குறைந்தது 37 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.