செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம் ‘ராயன்’..!?

தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம் ‘ராயன்’..!?

1 minutes read

பல சர்வதேச விருதுகளை வென்ற கேப்டன் மில்லருக்குப் பிறகு ராயனாக அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக இருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் தனுஷ், செல்வராகவன், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் , ‘பருத்திவீரன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் செல்வராகவன்- காட்டில் பயங்கரமான மிருகங்கள் குறித்து உரையாடுவதும், ராயனை பற்றி பேசுவதும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சில இடங்களில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தின் அடுத்த பாகமாக இருக்குமோ..! என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பின்னணி இசையில் ஏ ஆர் ரஹ்மானின் சர்வதேச முத்திரை தரமாக இடம் பிடித்திருப்பதாலும், தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவ காட்சிகளாலும் ரசிகர்களிடத்தில் ராயனை பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More