செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கறுப்பு ஜூலை | ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்

கறுப்பு ஜூலை | ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்

2 minutes read

Sri Lanka, Island of Terror – An Indictment

 

by Thornton, E.M. & Niththyananthan, R.

 

தமிழில் – ரஜீபன்

 

மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.

திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.

 

அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின்  பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.

 

பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன

அவர்கள் தனது ஆடைகளை பலவந்தமாக அகற்றியவேளையிலும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தனக்கு  ஏற்படுத்தப்பட்ட வலிகள் தன்னை பாதிக்காத நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள்.

தன்மீது சுமத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத அவமானம் குறித்து அவள்வெட்கப்படவில்லை.

ஏறைக்குறைய 20 ஆண்கள் அவளை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய பின்னரே ஒருவன் ஏனையவர்களை எச்சரித்தான் . அவளை மூர்க்கத்தனமாக உலுப்பினான்.

அவள் கத்தவும் போராடவும் தொடங்கினாள்,சுற்றிலும் பார்த்த அவள் தனது உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருப்பதை முதல்தடவையாக உணர்ந்தாள்.

நான் உதவியில்லாத பார்வையாளனாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் திடீரேன தனது முஷ்டிகளை இறுக்கிக்கொண்டாள்,பின்னர் அவளது முகத்த்தில் உதவியற்ற சரணடைதல் தென்பற்றது.அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

ஆண்டவரே அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களிற்கு தெரியாததால் அவர்களை மன்னியுங்கள்

அவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மயக்கத்திலாழ்ந்தாள்.அவர்கள் பின்னர் அவள்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர்.

உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவதை இரண்டாவது தடவையாக நான் அன்றைய தினம் பார்த்தேன்.

நாங்கள் மத்திய காலத்திற்குள் நுழைந்துவி;ட்டோமோ என நான் சிந்தித்தேன்.

இன்றைய காலத்து சிங்கள பௌத்தர்களை விட வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் – காட்டுமிராண்டிகள் மிகவும் நாகரீகமானவர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

3.15- இரண்டுமணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் அந்த பகுதி களியாட்ட நிகழ்வு இடம்பெறும் பகுதி போல காணப்பட்டது. சூறையாடப்பட்ட பொருட்களை மக்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

ஆடைகள் முதல் தளபாடங்கள் வரை சூறையாடப்பட்டன.

இராணுவ டிரக் அங்கு வந்தவேளை சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயலவில்லை.

அவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள் என்ற செய்தி அவர்களிற்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

4.30  – வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் ஆறுதலாக அவசரமின்றி தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் இன்னமும் எனது வீட்டை தாக்கவில்லை.மஹரகம வாக்காளர் பட்டியலில் நான் என்னை பதிவு செய்யாததே இதற்கு காரணம்;.

நான் ஒரு தமிழன் என யாரோ காடையர்களிற்கு தகவல் வழங்கப்போகின்றார்கள்.

எனது குடும்பத்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததால் நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன்.

6.15 – அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது எனினும் அவர்கள் தொடர்ந்தும் சூறையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

பெடெஸ்டல் மின்விசிறியொன்றை யுவதியொருவர் கொண்டு செல்வதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இன்னுமொரு குழுவினர் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட யுவதிகள் பல பொதிகளை கொண்டுசென்றுகொண்டிருந்தனர்.உடைகளாகயிருக்கவேண்டும்.

 

7மணி இன்னமும் இருள் விலகவில்லை எனது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More