தெற்கு இலண்டனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நபர் ஒருவரை தலையில் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
40 வயதான மார்ட்டின் பிளேக், செப்டம்பர் 2022 இல் ஸ்ட்ரீத்தாமில் பொலிஸ் வாகனத்தை நிறுத்தும் போது நிராயுதபாணியாக இருந்த கிறிஸ் கபாவை சுட்டுக் கொன்றார்.
திங்களன்று ஓல்ட் பெய்லியில் தீர்ப்புக்குப் பிறகு பேசிய கபாவின் குடும்பத்தினர், “எங்கள் வாழ்க்கை சட்டத்தால் மதிப்பிடப்படவில்லை என்பதற்கு இது வேதனையான சான்று” என்று கூறினார்.
இதேவேளை, “எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என பெருநகர பொலிஸ் ஆணையர் சர் மார்க் ரோவ்லி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 24 வயது இளைஞனைக் கொல்லும் நோக்கத்தை மறுத்த பிளேக், நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் ஆழ்ந்த மூச்சு எடுத்தார்.
விசாரணை காலம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.