வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் உயர்ந்த வட்டி வீதம் காரணமாக கனடாவாசிகள் அதிகளவு கடன் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கனடியர்கள் கடன் பெறும் வீதம் தற்போது அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன், கடன் செலுத்துவதில் தாமதங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே கடன் பெறுதலுக்கு பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலண்டு பகுதியில் கடன் தொகை 2.5 ட்ரில்லியன் கனடிய டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பீடும் போது 4.1 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், அதிக அளவுத் தொகையை கடன் பெறுவது மற்றும் உரிய நேரத்தில் கடனை செலுத்த முடியாமை ஆகியன 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.