செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!

பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!

0 minutes read
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டமையைத் தாம் வரவேற்கின்றார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

எந்தக் குற்றத்துக்காகப் பிள்ளையான் கைது செய்யப்பட்டாரோ அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.