கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தாம் பிரதமர் பதவியிலிருந்து விலக இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, கனடா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். கனடாவுக்கு மாற்றங்களைக் கொண்டுவர தாம் தயார் என்றும் சூளுரைத்திருக்கிறார். வெறும் அரசியலுக்காகப் பதவியை நாடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஆளுங்கட்சியினர் தங்களது புதிய தலைவரை, எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, வெற்றி பெற்றாலும் பொறுப்பில் நீண்டகாலம் நீடிப்பது சாத்தியமில்லை. காரணம், இவ்வாண்டு கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சி இருவருக்கும் இடையே சிறு வேற்றுமையே இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. மேலும், பழமைவாதக் கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறது.