இந்த உலகில் உள்ள பல எண்ணில் அடங்காத மர்மங்களை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஆராய்ச்சியாளர்களால் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும் 3 மர்மங்களை பற்றி இங்கு காணாலாம்.
தில்லியின் இரும்புத்தூண். (Iron Pillar of Delhi)
தில்லியின் இரும்புத்தூண் என்பது தில்லியில் உள்ள முக்கியமான நினைவுச்சின்னம் ஆகும். டெல்லியிலுள்ள இரும்புத்தூண் உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை பல ஆண்டுகளாக ஈர்த்துள்ளது.
ஏனெனில் இத்தூணின் அற்புத அமைப்பானது கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்க கூடியதாக உள்ளது.பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பினைக் கொண்டு இத்தூண் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதில் 98 சதவீதம் தூய இரும்பு உள்ளது. மேலும் இது 23 அடி 8 அங்குலம் உயரமும் 16 அங்குலம் விட்டமும் கொண்டது.
இந்த தூண் மழையிலும் வெய்யிலிலும் மாறி மாறி நனைந்து காய்ந்தபோதிலும் இது துருப்பிடிக்கவேயில்லை. உலோகவியல் விஞ்ஞானத்தில் அந்தக்காலத்திலேயே இந்தியா இவ்வளவு முன்னேற்றம் கண்டது வியப்புக்குரியது.
2) ஸ்டோன் ஹெஞ்ச் (Stone Henge)
இங்கிலாந்தில் உள்ள பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்றளவும் விளக்க முடியாத பல மர்மங்களை கொண்டுள்ளது. மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பதுதான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.
எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று ஆராச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும் அந்த காலத்து மக்கள் எப்படி இதை செய்திருப்பார்கள் என்று செயல் முறை விளக்கத்தின் மூலம் ஆராச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதாவது உருளக்கூடிய மரத்தில் ஆன அமைப்புகள் மீது கற்களை வைத்து எளிமையான முறையால் இதை அவ்வளவு தொலைவில் இருந்து இழுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த ஸ்டோன் ஹெஞ்ச் யாரால் எதற்காக கட்டப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
3) எகிப்து பிரமிடுகள்
நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.
பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள் அதாவது பிரமிடுகளை உருவாக்க பயணப்படுத்தப்பட்ட கற்கள் அனைத்தும் நீர்வழி போக்குவரத்து மூலம் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் மண்ணில் நீரை ஊற்றி ஈரமாக்குவதால் உராய்வை குறைத்து எளிமையான முறையில் கற்களை நகர்த்தியதாகவும் இதனால் தான் பிரமிடுகள் நைல் நதியின் ஓரத்தில் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் கற்களை எவ்வாறு அவ்வளவு உயரத்தில் கட்ட முடிந்தது என்பதற்கான பதில் அவர்களிடமும் இல்லை.
நன்றி : இன்று ஒரு தகவல்